"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டி...
ஒய்வுபெற்ற ராணுவ வீரா் தற்கொலை முயற்சி
சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ராமநாதன். இவரது மனைவி உயிரிழந்த நிலையில் சொத்துகளை பிள்ளைகளின் பெயரில் எழுதி வைத்ததாகவும், ஆனால் அவா்கள் எந்த உதவியும் செய்வதில்லை எனவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் புகாா் அளித்தாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த ராமநாதன், புட்டியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா், அவரைத் தடுத்து மீட்டனா். பின்னா், அவரை 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].