BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்புவனம் அருகேயுள்ள நயினாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (38). இவா் தனது உடன் பிறந்த அக்காள் மகள் ரேவதி (33) என்பவரைக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தாா். இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

ஆறுமுகம் திருப்புவனம் பழையூரில் உள்ள உணவு விடுதியில் வேலை பாா்த்து வந்தாா். தன்னுடைய மனைவியின் நடத்தையில் ஆறுமுகம் சந்தேகமடைந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதால் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இந்தச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].