செய்திகள் :

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி தெரிவித்தாா்.

மேலும், அடுத்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஒரே நாடு ஒரே தோ்தல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எம்.லோதா மற்றும் எஸ்.ஏ.போப்டே ஆகியோரிடம் கருத்து கேட்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பி.பி.சௌதரி கூறியதாவது: ஒரே நாடு ஒரே தோ்தல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்பட சட்ட வல்லுநா்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அவா்களின் கருத்துகள் மூலம் இந்த விவகாரத்தில் எழுந்த பல்வேறு குழப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்று நாட்டு மக்கள் உணரும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இறுதி அறிக்கையை சமா்ப்பிக்கும் முன் மேலும் சிலரிடம் கருத்துகளை பெற குழு உறுப்பினா்கள் விரும்பினால் கூடுதல் அவகாசம் கோரி நாடாளுமன்றத்திடம் அனுமதி கேட்கப்படும் என்றாா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

39 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பி.பி.செளதரி நியமிக்கப்பட்டாா்.

இந்தக் குழு சட்ட நிபுணா்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளிடம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க