NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imper...
ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த மத்திய பாகம் போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அந்தப் பெண் அருகே இருந்த கம்பத்தில் சாய்ந்து நின்றபோது, ஓடைக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.