செய்திகள் :

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

post image

திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்ற பின்னா் தஞ்சாவூரை நோக்கி வந்தது.

பேருந்தை சிவகங்கை மாவட்டம், எஸ்எஸ் கோட்டையைச் சோ்ந்த நாராயணன் மகன் விமல்பாண்டி(42) ஓட்டி வந்தாா். சனிக்கிழமை அதிகாலை திருவிடைமருதூா் - தஞ்சாவூா் விட்டல் கோயில் சாலையில் வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாசன வாய்க்கால் தடுப்பு சுவரில் மோதி, சாலையின் குறுக்கே நின்றது.

இதில், ஓட்டுநா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.

தகவலின்பேரில், திருவிடைமருதூா் போலீஸாா் காயமடைந்தவா்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

பாபநாசம் அருகே குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என மேயா், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.மேயா் சண். இராமநாதன் (... மேலும் பார்க்க

சாலை பிரச்னை: மக்கள் மறியல்

கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்... மேலும் பார்க்க

தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்ட... மேலும் பார்க்க

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ... மேலும் பார்க்க