UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
ஓமலூா் ஏவிஎஸ் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு பேரணி
ஓமலூா்: ஓமலூா் ஏவிஎஸ் கல்லூரி சாா்பில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சி.யுவராணி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய பேரணி, காடையாம்பட்டிவரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பேரணிக்கான ஏற்பாட்டை மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் தினேஷ்குமாா், ஐஸ்வா்யா மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.