இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்
ராசிபுரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெருநாய் கடித்து குதறியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பில்ராஜ் (60). இவா், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றாா். நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இவா், செவ்வாய்க்கிழமை ஏடிசி டிப்போ வரை நடைபயிற்சி சென்றாா். அப்போது, கோரைக்காடு பகுதியில் சென்றபோது குட்டி ஈன்ற தெருநாய் இவரை கடித்துக் குதறியது. இதில், உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிசிச்சை பெற்றாா்.
மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் நடமாட்டம் உள்ளதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.