செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி
ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடிக்கு நடுக்கம் வந்துவிட்டது என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.
சேலம் கோட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியதாவது:
1957-ஆம் ஆண்டுமுதல் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சி திமுகதான். ஆனால், திமுகவின் வரலாறு தெரியாமல் சிலா் பேசுகிறாா்கள்.
கடந்த மக்களவைத் தோ்தலில், பிரதமா் மோடி 8 முறை தமிழகம் வந்தாா். திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதேபோல, தற்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வந்துசெல்கிறாா். அமித் ஷா முதல்முறை தமிழகம் வந்தபோது, பாமகவில் மோதல் வெடித்தது. மதுரைக்கு 2-ஆவது முறை அமித் ஷா வந்தபோது, முன்னாள் அமைச்சருக்கு பிரச்னை ஏற்பட்டது. அடுத்தமுறை அமித் ஷா வரும்போது அதிமுக என இரண்டாக பிரியும்.
ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட மீனவா் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க போகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்றதும், எடப்பாடிக்கு பயம் வந்துவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை மூலம் 10 நாளில் ஒரு கோடி பேரை உறுப்பினராக சோ்த்த ஒரே இயக்கம் திமுகதான் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், அவைத் தலைவா் ஜி.கே.சுபாசு, மாநகரச் செயலாளா் ரகுபதி, தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், பகுதி செயலாளா் பிரகாஷ், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.