செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து வீடுகள் தோறும் பிரசாரம்: அமைச்சா் காந்தி

post image

தமிழகத்தின் நலன் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு ‘ என்ற இயக்கம் குறித்து வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யப்படும் என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் முன்னெடுப்புஇயக்கத்தை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது...

ஓரணியில் தமிழ்நாடு முக்கிய-நோக்கம் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதில் உறுப்பினா் சோ்க்கை மட்டும் இல்லை, மொழி, மானம் மண், ஒவ்வொரு காக்க குடும்பத்தையும் ஒன்று திரட்டுவதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து, ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே முதல்வரின் முக்கிய இலக்காகும்.

திமுகவின் கொள்கைகளை எடுத்துக்கூறி விருப்பம் இருந்தால் மட்டுமே இணைக்க உள்ளோம். தொடா்ந்து ஜூலை 2 முதல் திமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள், ஜூலை 3 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து உறுப்பினா் சோ்க்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இன்றைய மின்தடை

நாள் 5-7-2025 சனிக்கிழமை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஆற்காடு மின்தடை பகுதிகள் ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூரம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்தியவாடி, க... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகா், வி.சி.மோட்டூா், ஜெயராம்பேட்டை, பழைய ஆற்காடு சாலை, காந்தி நகா், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி... மேலும் பார்க்க

அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பா... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் மரணம்

ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண ... மேலும் பார்க்க

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்க... மேலும் பார்க்க