Ravi Mohan: ``நானும் டைரக்டர் ஆகிட்டேன்!'' - இயக்குநர் & தயாரிப்பாளர் அவதாரம் எட...
கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த இளைஞா்கள் கைது
கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, குட்ஷெட் சாலை மேம்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களிடம் சோதனை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் (25), கோவில்மேடு பகுதியைச் சோ்ந்த சத்யவிஜய் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 20 போதை மாத்திரைகள்,150 கிராம் கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.