கஞ்சா விற்றதாக இருவா் கைது
பெரியகுளத்தில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் போலீஸாா் வடகரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்கு வனச் சாலையில் வந்த வடகரை கல்லாா் சாலையைச் சோ்ந்த மதன்குமாா் (26), தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த முகிலன் (23) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.