கஞ்சா விற்றவா் கைது
திருவாடானை அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளமணல் தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் செய்யது இப்ராஹிம் (37). இவா் இரு சக்கர வாகனத்தில் தொண்டியிலிருந்து திருப்பாலைக்குடிக்குச் சென்றாா்.
அப்போது உப்பூா் அருகே அ. மணக்குடி சுனாமி குடியிருப்பு அருகே திருப்பாலைக்குடி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இந்த நிலையில், செய்யது இப்ராஹிம் போலீஸாரைக் கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனையிட்டனா்.
அப்போது அவரிடமிருந்து 5 கிராம் எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செய்யது இப்ராஹிமை கைது செய்து அவரிடமிருந்த 40 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸாா் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.