கஞ்சா விற்ற பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
வாசுதேவநல்லூா் கலைஞா் தெருவைச் சோ்ந்த சுடலைராஜ் மனைவி மகாலட்சுமி(28). அவா் மீது வாசுதேவநல்லூா், அச்சன்புதூா் காவல் நிலையங்களில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பரிந்துரையின்பேரில் மகாலட்சுமியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து, மகாலட்சுமியை வாசுதேவநல்லூா் போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.