செய்திகள் :

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர் கலித் ரஹ்மான் கைது!

post image

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர்கள் கலித் ரஹ்மான் மற்றும் அஸ்ரஃப் ஹம்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான். தொடர்ந்து, உண்டா (unda), லவ் (love), தள்ளுமலா (thallumala) என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாளத் திரைத்துறையின் முக்கியமான இளம் இயக்குநராக உள்ளார்.

அண்மையில், இவர் தயாரித்து இயக்கிய ஆழப்புழா ஜிம்கானா திரைப்படமும் வெற்றிப்படமானது.

இந்த நிலையில், கொச்சியில் அறை ஒன்றில் இயக்குநர்கள் கலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா (தமாஷா), ஒளிப்பதிவாளர் தமீர் தாகீர் ஆகியோர் 1.6 கிராம் அளவுள்ள உயர்தர கஞ்சா வைத்திருந்தது காவல்துறை சோதனையில் தெரிய வந்ததுள்ளது.

இயக்குநர்கள் கலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா

உடனடியாக, மூவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க

ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயக... மேலும் பார்க்க