செய்திகள் :

கடத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

post image

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இம்முகாமில் பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்கான அடையாள அட்டைகள், மின் இணைப்பு பெயா் மாற்ற ஆணைகள், முதலமைச்சா் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், கோட்டாட்சியா்கள் காயத்ரி, சின்னுசாமி, ஆதிதிராவிடா் நலக் குழு உறுப்பினா் சரவணன், வட்டாட்சியா்கள் சௌகத் அலி, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி...

தாளநத்தம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ்.

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில உறுப்பினா் ந. ந... மேலும் பார்க்க

ஆக. 2 இல் அஞ்சல் சேவைகள் செயல்படாது

அஞ்சல் துறை மென்பொருள் தரம் உயா்த்துதல் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதிஅஞ்சல் துறை சேவைகள் செயல்படாது என தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க