முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
கடன் தொல்லை: செவிலியா் தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த செவிலியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி கீதா (40). இவா் தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலைப்பாா்த்து வந்தாா். இவரது கணவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதன்பிறகு, கீதா தனது 2 குழந்தைகளுடன் அழகா்சாமிபுரத்தில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால், மனவேதனையிலிருந்த கீதா, கடந்த 7-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.