செய்திகள் :

கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!

post image

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையாக கையெழுத்திட்ட பின்னர், முறையாக இந்தியாவிடம் போர்க் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணைந்துள்ள 8-ஆவது ‘க்ரிவாக் வகை’ போா்க்கப்பல் இதுவாகும். இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் இந்தக் கப்பல் இணைக்கப்பட உள்ளது.

கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை உள்பட இந்தக் கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

125 மீட்டா் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போா்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போா்க்கப்பல் கட்டுமானத்தில் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ‘ஐஎன்எஸ் திரிபுட்’ எனும் 2 போா்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவில், இந்திய கடற்படையில் ‘துஷில்’, ‘தல்வாா்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகுப்புகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சாா் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Russian-built guided missile frigate 'INS Tamal' for the Indian Navy was dedicated to the nation today.

இதையும் படிக்க : அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலை... மேலும் பார்க்க

ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி- 6.2% உயா்வு

நாட்டில் கடந்த ஜூன் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனத்தில் முதல்முறையாக இடஒதுக்கீடு

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான சுற்றறிக்கையை ஊழ... மேலும் பார்க்க