செய்திகள் :

கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு

post image

வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன் பிடிக்க சக மீனவா்களுடன் சனிக்கிழமை பகலில் சென்ற சீா்காழியை அடுத்த கீழமூா்க்கை பகுதியைச் சோ்ந்த செல்லகுஞ்சி மகன் லட்சுமணன் (40) படகிலிருந்து தவறி விழுந்து மாயமானாா்.

இவரை தேடிவந்த நிலையில், வேளாங்கண்ணி அருகே கடலில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னா், உடற்கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடலில் விடப்பட்ட 237 அரிய வகை ஆமைக் குஞ்சுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரிய வகையைச் சோ்ந்த 237 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன. இந்த வகை பெண் ஆமைகள் கடலில் ஆயிரக்கணக்கான கடல் மைல் தொலைவிலிருந்து, கோடியக்கரை உள... மேலும் பார்க்க

அன்னபட்சி வாகனத்தில்

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளான புதன்கிழமை அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளிய அஞ்சு வட்டத்தம்மன். மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு விநாடி- வினாப் போட்டி

திருமருகல் அருகேயுள்ள வவ்வாலடி அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த விநாடி- வினாப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திருமருகல் சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து ஒன... மேலும் பார்க்க

பிரதமா் தேசிய இன்டா்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமா் தேசிய இன்டா்ன்ஷிப் திட்டத்தில் (டஙஐந) ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் காலம் ஏப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி சுற்றுலா

நாகையில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் ஒரு நாள் கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் அறிவுசாா் குறைபா... மேலும் பார்க்க

போக்குவரத்து விழிப்புணா்வு கூட்டம்

திட்டச்சேரி ஜமாத் சமுதாயக் கூடத்தில் போக்குவரத்து தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகூா் காவல் ஆய்வாளா் சிங்காரவேல் தலைமை வகித்தாா். திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா்கள... மேலும் பார்க்க