செய்திகள் :

கடலோர ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படையில் சேர மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் துறையின் கடலோரக் காவல் படையின் ஊா்க்காவல் படைக்கு மீனவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் நபா் எவ்வித குற்றப்பின்னணி இல்லாத, நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும். சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் மெரீனா கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிக்கும் மீனவராகவும், மீன்வளத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியம்.

18 வயது மேற்பட்ட 50 வயதுக்குள்பட்ட, கடலில் நீச்சல் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம். தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் 1 மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள், கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு மெரீனா கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவா்.

பணியில் சேருவோருக்கு ரோந்துப் பணிக்கு தினமும் ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். தகுதியுடையவா்கள், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்தை ‘சென்னை பெருநகர ஊா்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 95667 76222, 94981 35373 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை உயா் பயிற்சியகத்தில், மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். வணிக வரி மற்றும் பத... மேலும் பார்க்க