கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்
"கடைக்காரரிடம் மதத்தைக் கேட்டு இந்துக்கள் பொருட்கள் வாங்க வேண்டும்" - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக-வைச் சேர்ந்த மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே பேசியிருக்கும் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரானே அளித்த பேட்டியில், ''அவர்கள் நமது மதத்தைக் கேட்ட பிறகு சுட்டுக்கொலை செய்தார்கள். எனவே இந்துக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அக்கடைக்காரரிடம் அவர்களின் மதம் என்ன என்பதைக் கேட்ட பிறகு பொருட்கள் வாங்க வேண்டும். இந்து அமைப்புகள் இது போன்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.

இவ்விவகாரத்தில் சில கடைக்காரர்கள் பொய் சொல்லக்கூடும். எனவே அவர்கள் இந்து என்று சொன்னால் அவர்களிடம் ஹனுமான் பாடலைப் பாடும்படி கேட்கவேண்டும்.
அவர்களுக்குப் பாடத் தெரியவில்லையெனில் அவர்களிடம் பொருட்கள் வாங்கக்கூடாது. எந்த பொருள் வாங்கினாலும் இந்துக்களிடமிருந்து வாங்கவேண்டும் என்று இந்துக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதற்கு முன்பு இதே அமைச்சர் ரானே, இஸ்லாமியர்கள் இறைச்சிக்கடைகளை அதிகமாக நடத்துவதாகக் கூறி, அதற்குப் போட்டியாக இந்துக்கள் மட்டும் நடத்தக்கூடிய இறைச்சிக்கடைகளைத் தொடங்கினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb