கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
கடையநல்லூா் நடு அய்யாபுரம் தெருவைச் சோ்ந்தவா் முகம்மதுஅலி (56), எலக்ட்ரீசியன். கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிந்தபோது, இவா்மீது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.