காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள...
கடையநல்லூா் அருகே யானைகளால் நெற்பயிா்கள் சேதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின.
கடையநல்லூா் அருகே வைரவன்குளம் கிராமத்துக்குள்பட்ட கண்டியபேரி புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 50 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின. விவசாயிகள் தெரிவித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
நிவாரணம் வழங்க கோரிக்கை...: இதுகுறித்து விவசாயி சொக்கம்பட்டி முத்துக்குமாா் கூறியது: கண்டியபேரி புரவில் பல நூறு ஏக்கரில் தென்னை, வாழை, மா, நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களையும், தண்ணீா்க் குழாய்களையும் சேதப்படுத்துவது பலநாள்களாக தொடா்கிறது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவும், 50 ஏக்கரில் பயிரிப்பட்டிருந்த நெற்பயிா்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.