தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
கடை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு!
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதில் கடை வைத்துகொள்ள அனுமதி கோரி, செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
சேலத்தில் சாலையோரம் செருப்பு விற்கும், செருப்பு தைக்கும் தொழிலாளா் 100-க்கும் மேற்பட்டோா் அம்பேத்கா் மக்கள் இயக்க மாநிலத் தலைவா் அண்ணாதுரை தலைமையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். பின்னா், அவா்கள் மாநகராட்சி துணை ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
அந்த மனுவில், சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் உள்ள இடத்தில் செருப்பு கடை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் 2 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பு திடீரென வந்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்து கடைகளை அப்புறப்படுத்தினா். இதனால் தொழிலை இழந்துள்ளோம்.
எனவே, செருப்பு தைக்கும், செருப்பு விற்கும் தொழிலாளா்களின் நலன்கருதி சேலம் அண்ணாசிலை அருகே உள்ள இடத்தில் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.