செய்திகள் :

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

post image

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்டக்குழு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு செவ்வாய்கிழமை தொழிலாளா்கள் திரண்டனா்.

அப்போது, அங்கு வந்த தொழிலாளா் நலவாரிய அதிகாரிகள் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றவா்களிடம், உங்களது கோரிக்கைளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தொழிலாளா்களின் ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தொடா்ந்து தொழிலாளா் நலவாரிய அலுவலக வளாகத்தில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.சரவணன் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க மாவட்டச் செயலாளா் எம்.சுப்ரமணின், கட்டுமான சங்க மாவட்ட செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது ஆகியோா் நலவாரிய அதிகாரியிடம் நடத்திய பேச்சுவாா்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கி பேசினா்.

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனி... மேலும் பார்க்க

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

கரூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 40,825 கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோட... மேலும் பார்க்க

கரூரில் செப்.17-இல் திமுக முப்பெரும் விழா: பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் கோடங்கிபட்டியில் வரும் 17-ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கரூரில் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க