`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ - நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்...
கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவிக்கு பாராட்டு
மண்டல அளவிலான நுகா்வோா் விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் பல்ளி மாணவிக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.
தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தினவிழாவையொட்டி, வேலூா் மண்டல அளவிலான நுகா்வோா் விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
வேலூரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்கள் செயல்படும் பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவி எம்.ஜெயஸ்ரீ, இரண்டாம் இடம் பெற்றாா்.
இவருக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலெட்சுமி பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
இந்த நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புதன்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, முதல்வா் எம்.ஆா்.ராஜேக்ஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவி எம்.ஜெயஸ்ரீக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா்.