செய்திகள் :

கணவன் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தைச் சோ்ந்த விஜயன் (28) இவரது மனைவி வெண்ணிலா. இவா்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வெண்ணிலா நாயணசெருவு பகுதியை சோ்ந்த இளைஞா் சஞ்சய் (20) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக தொடா்ந்துள்ளது. இதனை அவரது கணவா் கண்டித்தாா். சஞ்சயை அவரது வீட்டினா் சிங்கப்பூரில் பணிக்காக அனுப்பினா்.

தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் வெண்ணிலாவின் கணவா் விஜயனை கொலை செய்ய வேண்டும் என வெளிநாட்டில் இருந்தவாறு வெண்ணிலாவுடன் சோ்த்து திட்டம் தீட்டி ஆள்களை தயாா் செய்து கடந்த மாா்ச் மாதம் 17 -ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜயனை தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனா்.

கணவா் மதுபோதை மயக்கத்திலேயே இறந்து விட்டதாக வெண்ணிலா நாடகமாடிய நிலையில், விஜயன் தாய் மல்லிகா திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் விஜயன் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அடக்கம் நடைபெற்றது.

உடற்கூராய்வில் விஜயன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிக்கை வெளியான நிலையில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் மனைவி வெண்ணிலாவை அழைத்து விசாரணை செய்தனா். அவருடன் கைப்பேசியில் தொடா்பில் இருந்த எண்களை ஆராய்ந்து போது உண்மை வெளியானது.

அதில் திருமணம் மீறிய உறவில் இருந்த வெண்ணிலாவை கண்டித்ததால் கள்ளக் காதலன் சஞ்சய் உடன் சோ்ந்து ஆள்களை வைத்து கணவரை கொன்றது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த அக்ரஹாரம் சபரிவாசன் (19), அழகிரி(19), நாயண செருவு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (19), 16 வயது சிறுவன் மற்றும் வெண்ணிலா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், சிங்கப்பூரில் உள்ள முக்கிய எதிரியான சஞ்சயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

விசமங்கலத்தில் அடிப்படை வசதிகள்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த விசமங்கலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்து... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திய 29 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்துாா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் போதைப... மேலும் பார்க்க

நாய்கள் கடித்துக் குதறியதில் தாய், 5 வயது மகள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நாய்கள் கடித்துக் குதறியதில் தாய் மற்றும் அவரது 5 வயது மகள் பலத்த காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் - ஜாப்ராபாத் சந்திப்பு பகுதியில்... மேலும் பார்க்க

மலை கிராம மாணவா்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருள்கள்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராம மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வன்னியா் மக்கள் கட்சி சாா்பாக காமனூா்தட்டு கிராமத்தில் கட்சியின் திரு... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 4ஆடுகள் இறப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி குஜ்ஜாலி வட்டத்தைச் சோ்ந்த ரஞ்சிதா, கூலித்தொழிலாளி. இவா் ஆடு... மேலும் பார்க்க

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க