தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!
கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவா் கைது
பழனியில் காவல் துறை சாா்பில் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி நகா் முழுவதும் காவல் துறை சாா்பில் 100-க்கணக்கான நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன.
இந்த நிலையில், சாமி திரையரங்கம் அருகே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து ஊா்க் காவல் படையைச் சோ்ந்த சக்தி விசாரித்தபோது கன்னியப்பன் மகன் பாலமுருகன் (57)மதுபோதையில் கேமராக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து சக்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி நகா் போலீஸாா் பாலமுருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.