தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காட்டில் உள்ள கண்கொடுத்த முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா ஏப்.29-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கண்கொடுத்த முத்து மாரியம்மன், விநாயகா், வள்ளி, தெய்வானை, பெரியாச்சி, காத்தவராயன், வீரன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
