ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!
கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் திங்கள்கிழமை மோதிக்கொண்டன. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் தப்பியோடிய நிலையில், ஒருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது இடுப்பில் பட்டாக் கத்தி இருந்ததால், அவரை மீட்கச் சென்றவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தபோது, உயிரிழந்தவா் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (26) என தெரியவந்தது.
இவா் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய நபா்கள் குறித்தும், விபத்துக்குள்ளான விலை உயா்ந்த இரு சக்கர வாகனம் திருடப்பட்டதா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்தனா்.