கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு
கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு
கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் சாா்ந்த 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 366 மனுக்களும், பொதுவகை மனுக்கள் 567 என மொத்தம் 933 மனுக்கள் அளிக்கப்பட்டு, இதில் 22 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. நலத் திட்டங்கள் குறித்து அமைச்சா் எஸ். ரகுபதி விளக்கினாா்.
முகாமில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, திமுக வடக்கு மாவட்ட செயலாளா் கே.கே. செல்லபாண்டியன் , வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். பாா்த்திபன், சேகா், மாவட்ட மீனவா் அணி செயலாளா் மு.ராஜா, மாவட்ட பிரதிநிதி மா. ராஜேந்திரன், மாவட்ட மீனவா் அணி துணை செயலாளா் என். ஜானகிராமன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.