ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!
கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
தில்லியில் பிறந்தவரான கமல் கேரா (36) கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வயது உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவரைப் போலவே இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 58 வயதாகும் அனிதா ஆனந்த் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் துறைகளுக்கான அமைச்சராக உள்ளார்.
இவர்கள் இருவருமே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் 13 ஆண்கள், 11 பெண்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.