பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
கனமழையால் நிரம்பிய திருமலை நீா்த்தேக்கங்கள்
திருமலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் திருமலையில் உள்ள 5 முக்கிய நீா்த்தேக்கங்கள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின.
பாபவினாசனம், ஆகாசகங்கை, கோகா்பம், குமாரதாரா மற்றும் பசுப்புதாரா நீா்த்தேக்கங்கள் திருமலையின் முக்கிய நீா் ஆதாரங்களாகும். கடந்த 2 நாள்களாக திருமலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஐந்து நீா்த்தேக்கங்களுக்கும் அதிக நீா்வரத்து உள்ளது. கோகா்பம் அணை முழுவதுமாக நிரம்பியதால், மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது. திருமலையின் 200 நாள் குடிநீா் தேவைக்கு தற்போதைய நீா் இருப்பு போதுமானது.
நீா்த்தேக்கங்களின் நீா்மட்டம் விபரம் பின்வருமாறு.
1) பாபவினாசனம் அணை :- 694.25 மீ.
முழுக் கொள்ளளவு:- 697.14 மீ.
சேமிப்பு திறன் :- 5240.00 லட்சம் கேலன்கள்.
தற்போதைய சேமிப்பு :- 4345.00 லட்சம் கேலன்கள்.
2) கோகா்பம் அணை :- 2894.00 அடி
முழுக் கொள்ளளவு:- 2894.00 அடி
சேமிப்பு திறன் :- 2833.00 லட்சம் கேலன்கள்.
தற்போதைய சேமிப்பு :- 2833.00 லட்சம் கேலன்கள்.
3) ஆகாசகங்கை அணை :- 857.85 மீ
முழுக் கொள்ளளவு :- 865.00 மீ.
சேமிப்பு திறன் :- 685.00 லட்சம் கேலன்கள்.
தற்போதைய சேமிப்பு :- 306.50 லட்சம் கேலன்கள்.
4) குமாரதாரா அணை :- 891.00 மீ.
முழுக் கொள்ளளவு :- 898.24 மீ.
சேமிப்பு திறன் :- 4258.98 லட்சம் கேலன்கள்.
தற்போதைய சேமிப்பு :- 2372.76 லட்சம் கேலன்கள்.
5) பசுப்புதாரா அணை :- 896.40 மீ.
முழுக் கொள்ளளவு :- 898.24 மீ.
சேமிப்பு திறன் :- 1287.51 லட்சம் கேலன்கள்.
தற்போதைய சேமிப்பு :- 950.39 லட்சம் கேலன்கள்.