செய்திகள் :

கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

post image

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தாம்பரத்தில் முக்கிய சாலைகளான ஜி.எஸ்.டி. சாலை - தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் - பம்மல் - குன்றத்தூர் சாலை - திருநீர்மலை சாலை - 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) - தாம்பரம் - வேளச்சேரி சாலை - மற்றும் காந்தி ரோடு - முடிச்சூர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

கனரக வாகனங்கள் திருப்பி விடப்படும் இடங்கள்:

குன்றத்தூர் - சென்னை

குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் - அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை - எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓரகடம் - சென்னை

ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - சென்னை

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் - சென்னை

தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி நோக்கி வரும் கனரக வாகனங்கள் - தாம்பரம் 'fly over (Southern Side)' பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் fly fly over-மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்

மதுரவாயில் - சென்னை

மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் - மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - சென்னை

செங்கல்பட்டிலிருந்து சென்னை கனரக நோக்கிவரும் வாகனங்கள் - சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பர்கூர்: சிதிலமடைந்து இடியும் நிலையில் வீடுகள்; அச்சத்துடன் வாழும் பழங்குடிகள் - கண்டுகொள்ளுமா அரசு?

பர்கூர் அருகே சிதலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது குடியிருப்புகளை புனரமைக்காமல் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர... மேலும் பார்க்க

India - Russia: "இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்"- பிரதமர் மோடி சொன்ன தகவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ர... மேலும் பார்க்க

"திமுக-தான் போலி வாக்காளர்களால் வெற்றி பெற்றது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது புளியங்குடி. இந்தப் பகுதியில் யானை, காட்டுப் பன்றி எனக் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதும், அதனை மக்கள் மீண்டும் காட்டுக்குள் ... மேலும் பார்க்க

`முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வீட்டுக்கே வரும்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே வந்து தரும்படியிலான திட்டம் தொடங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனப் ப... மேலும் பார்க்க

கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 'Vloggers, Youtubers, Instagram, Facebook' உள்ளிட்ட சமூக ... மேலும் பார்க்க