8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
கனிம வளத் துறை உதவி இயக்குநரை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
கனிம வளத் துறை உதவி இயக்குநரை இடமாற்றக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஆலோசகா் முகிலன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை கனிம வளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றும் சத்தியசீலன் என்பவா் மனு அளிக்க வரும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆா்வலா்களை தகாதவாா்த்தையிலும், மிரட்டல் தொனியிலும், கனிம வள சட்டங்களை கேலியாகவும் பேசுகிறாா். அவா்மீது துறைரீதியாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவரை உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சமூக ஆா்வலா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுரேஷ், எலச்சிபாளையம், கோக்கலை எளையாம்பாளையம், பரமத்தி, சித்தம்பூண்டி, மல்லசமுத்திரம், மொஞ்சனூா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.