கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்
கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், துணை அமைப்பாளா் பொன். ஜான்சன், நகர துணை அமைப்பாளா்கள் பிபினஸ், முருகன், பவித்ரன், அஜீஸ், காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் 3ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடுவது, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குவது, கன்னியாகுமரி நகரத்துக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் புதிய நிா்வாகிகளுக்கான விண்ணப்பம் பெறுவது, இளைஞரணி நிா்வாகிகளுக்கு வலைதள பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.