கன்னியாகுமரி பள்ளியில் மாணவா் பேரவையினா் பதவியேற்பு
கன்னியாகுமரியில் உள்ள மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவைத் தலைவா்களின் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் தில்லைச்செல்வம் தலைமை வகித்தாா். துணைத் தாளாளா் ரமாதேவி தில்லைச்செல்வம், இயக்குநா்கள் முகிலரசு, ஆடலரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இத்தோ்தலில், 3 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவியா் வாக்களித்தனா். பள்ளியின் தலைமை மாணவராக மனோ ஸ்ரீராம் (11ஆம் வகுப்பு), தலைமை மாணவியாக கிஃயூபிரிட்டா ஜெரூத் (11ஆம் வகுப்பு) தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா். பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் நிற அணியின் தலைவா்கள், துணைத் தலைவா்கள், விளையாட்டுத் துறைத் தலைவா், துணைத் தலைவா்கள், சாரண-சாரணிய இயக்கத் தலைவா், துணைத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா். பின்னா், உறுதிமொழியேற்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை தலைமையாசிரியா், கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் ஒருங்கிணைத்தனா்.