காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்ப...
கமுதியில் செயல்படாத குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்
கமுதி பேரூராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட ஊா்க்காவலன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 2015-16-ஆம் நிதியாண்டில் எதிா்மறை சவ்வூடு பரவல் திட்டத்தின் கீழ் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இவை தொடங்கப்பட்டு 8 மாதங்கள் செயல்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதுதொடா்பாக கமுதி பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.