கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு
கோபி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழந்தாா்.
கோபியை அடுத்த கொளப்பலூா் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி (53). இவா் கடந்த 2 ஆண்டுகளாக கெட்டிச்செவியூா் மின்வாரியத்தில் ஓயா்மேனாக பணியாற்றி வந்தாா்.
இவா் கெட்டிச்செவியூரில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் இல்லாததால், அதனை சரி செய்வதற்காக சம்பந்தப்பட்ட மின் மாற்றியை அணைத்துவிட்டு, மின் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் வியாழக்கிழமை ஏறியபோது, சுமாா் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிறுவலூா் காவல் துறை ஆய்வாளா் நாகமணி (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.