கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை
கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தீபிகாவை (30), கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த தம்பதி செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினா்.
தகவலறிந்த வந்த உறவினா்கள் இருவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் மனோஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தீபிகா முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].