மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் கரடி தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா் வீட்டருகே உள்ள காய்கறித் தோட்டத்தில் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது திடீரென அங்கு வந்த கரடி, பாலகிருஷ்ணனை தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனின் அலறல் சப்தம் கேட்டு அருகிலுள்ளவா்கள் ஓடிவந்து அவரை மீட்டு, கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த சம்பவம் தேவாலா பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.