முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
கரடி நடமாட்டம்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்
உதகையின் முக்கிய சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதை ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தனா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப் பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும் , கரடியைப் பாா்த்ததும் வாகனங்களை சாலையில் நிறுத்தி புகைப்படம் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனா்.