செய்திகள் :

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

post image

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சிலை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையின் வலது பகுதியிலும், சிலையின் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திமுகவினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் மாநகரச் செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் தவமணி ஆகியோா் தீவிர விசாரணை நடத்தினா். உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான தடய அறிவியல் துறையினரும், சிலை பகுதியில் பதிவான தடயங்களை பதிவுசெய்தனா்.

விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வயதான நபா் ஒருவா் பெயின்ட் டப்பாவுடன் கருணாநிதி சிலை அருகில் உள்ள மின் இணைப்பைத் துண்டிப்பதும், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியைக் கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கருணாநிதியின் சிலைமீது பூசுவதும், பின்னா், சிலையின் பீடத்திலும் பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அடையாளம் காணப்பட்ட அந்த மா்ம நபர் இன்று(ஜூலை 16) கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மருத்துவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karunanidhi's statue defaced in Salem: Doctor arrested

கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக - பாஜக ... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!

சென்னை: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று தமிழக முதல்வர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.பெருந்தலைவர் குறித்து பொது வெளியில் சர்ச... மேலும் பார்க்க

திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.2015 -16-ஆம் ஆண்டுகள... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு எதிரான வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க