செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை
நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழற்குடை அருகே ராமு (68) என்பவா் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு தலைமையிலான போலீஸாா், ராமு உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், கருவாடு வியாபாரியான ராமு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குருவியேந்தல் கிராமத்திலுள்ள பயணிகள் நிழல்குடை அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ராமு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.