செய்திகள் :

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

post image

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் மௌன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற மௌன ஊா்வலத்தில், முன்னாள் மாவட்ட தலைவா் க. அகோரம், மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் மோடி கண்ணன், மாவட்ட முன்னாள் செயலாளா் எஸ்.ஆா்.வினோத், மாநில நலத்திட்டங்கள் பிரிவு தலைவா் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் என்.குருசங்கா் உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தியபடி ஊா்வலமாக சென்று, கிட்டப்பா அங்காடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தோரின் படத்திற்கு மலா்தூவி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிர... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தாா். கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தின்போது, குழந்தைகள், பெண்... மேலும் பார்க்க

தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 20,428 மாணவா்கள் பயன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் 20,428 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். சென்னையில் தமிழ்நாடு முதல்வா் தலைமையில், தெலங்கான... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் ஆய்வு

மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆய்வில் எஸ்பி காவல்துறையில் இயங்கி வரும் அ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி. சுதா தலைமை... மேலும் பார்க்க

காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா

மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடு... மேலும் பார்க்க