பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு
கரூா்: கரூரில் ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கரூா் வெங்கமேடு, ரொட்டிக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமாா்(19). இவா் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியில் கல்லூரியில் வந்தாா்.
இந்நிலையில் ஆக.17-ஆம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயக்குமாா் இரவுவெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மகன் காணாதது குறித்து வெங்கமேடு போலீஸில் ஆனந்த் புகாா் செய்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வெங்கமேடு மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாா் சடலமாக கிடப்பது அப்பகுதியினருக்கு தெரியவந்தது. இதுதொடா்பாக அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வெங்கமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, உயிரிழந்து கிடந்தவா் ஜெயக்குமாா் எனத் தெரியவந்தது.
உடனே போலீஸாா் ஜெயக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து ஜெயக்குமாா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.