மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
கரூர் கூட்ட நெரிசல் : 'மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது'- தமிழக ஆளுநர் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது.
இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.