கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு
கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது மகள் மற்றும் மாமனார் கரியா (75), மாமியார் கௌரி (70) ஆகியோரை வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் கிரிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். குற்றவாளியைப் பிடிக்க போலீஸார், சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த கொலைகளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிரிஷ் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகியை மணந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி கே.ராமராஜன், குற்றவாளியை விரைவில் பிடிக்க சிறப்புக் குழுக்களுக்கு உத்தரவிட்டார்.