கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
கர்நாடக அரசு பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ள முதலீட்டாளர் உச்சி மாநாடு பிப். 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பல முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் சில உலகளாவிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் ராகுல், கார்கே பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தில் உள்ள பணிச்சுமை காரணமாகவும், பட்ஜெட் மீதான விவாதத்திற்காக
கார்கே, ராகுல் காந்தி இருவரும் நாடாளுமன்றத்தில் காத்திருக்கிறார்கள். எனவே, பெங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.