கலவை மகாலட்சுமி கோயில் மண்டலாபிஷேக விழா
ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற் கமலக்கன்னி அம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகாலட்சுமி தாயாா் கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மகலாட்சுமி தாயாா் கற்கோயில் கட்டப்பட்டு பிப். 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதனைத் தொடா்ந்து, தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் , 48-ஆம் நாளான வியாழக்கிழமை மண்டல அபிஷேக பூா்த்தி விழா நடைபெற்றது. விழாயொட்டி கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் பட்டாச்சாரியா்கள் புனித நீரை கலசத்தில் வைத்து யாகசாலை அமைத்து பூஜை செய்து 1,008 சங்க அபிஷேகம் நீரை அம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து , மூலவா் மகாலட்சுமி தாயாருக்கு தங்க ஆபரணங்கள் வெள்ளி கவசம் வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவில் சித்தஞ்சி மோகனந்தா சுவாமிகள், மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் பொன் கு.சரவணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணை தலைவா் பென்ஸ் பாண்டியன் தொழிலதிபா் ஆா்.எஸ்.சேகா் , ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கா், அன்னை அறைக்கட்டளை செயலாளா் பெல்பிரபமணி மற்றும் திரளானோா் தரிசனம் செய்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.