பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
கலியுகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
கலியுகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் சைக்கலாஜிகல் திரில்லர் படமாக வெளியான திரைப்படம் கலியுகம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் சார்பில் கே. எஸ். ராமகிருஷ்ணா மற்றும் கே. ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். டான் வின்சண்ட் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கலியுகம் திரைப்படம் நாளை(ஜூலை 11) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kaliyugam film OTT release date.
இதையும் படிக்க: பாகுபலி மறுவெளியீட்டுத் தேதி!